அச்சரப்பாக்கம் அருகே தெரு நாய் கடித்ததில் சிறுவர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சசிகுமார் – சிவகாமி ஆகியோரின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் ஆகிய இரு சிறுவர்களும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சென்ற தெரு நாய் ஒன்று, இரு சிறுவர்களையும் கடித்துள்ளது.
சிறுவர்களின் சத்தம் கேட்டு, இதில் காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவர்களை அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
