பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான செங்கல்பட்டு சிறுமணி ரகத்தை முதன்முறையாக பயிரிட்டு, நல்ல மகசூலை பெற்றிருப்பதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொன்னேரி கருப்புகவுனி, ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி என 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. இவற்றை பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி, பி.ஜி.கணபதி, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான செங்கல்பட்டு சிறுமணி ரகத்தை முதன்முறையாக பயிரிட்டு, தற்போது அறுவடை செய்து எதிர்பார்த்த மகசூலை பெற்றுள்ளார். இந்த ரக அரிசிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
