கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் செயல்பாட்டிற்கு வந்த ப்ரீபெய்ட் ஆட்டோ சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு 18 ரூபாய்க்கு பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக சிஎம்டி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு ஆட்டோக்கள் புக் செய்யப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் முறையாக அரசு அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டு, ஆட்டோ இன்சூரன்ஸ் ஓட்டுனருக்கு லைசென்ஸ் மற்றும் பேட்ச் உள்ளதா என அனைத்தும் சரியாக உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
