Home செங்கல்பட்டு கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

0

திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்தனர்.

திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா திருப்போரூர் முருகன் கோயில், வட்டமண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளித்தார். பின்னர், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகச்சியாக வருகிற 21 ஆம் தேதி காலை 9 மணிக்குமேல் திருதேர் திருவிழா நடைபெற உள்ளது.

24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் முருக பெருமான் குதிரை வாகனம் மத்தியில்  தெப்ப குளத்தில் வளம் வருவார். 27 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version