Home செங்கல்பட்டு திருநீர்மலை ஜல்லி ஆலைகள் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநீர்மலை ஜல்லி ஆலைகள் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

0

திருநீர்மலை பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் ஜல்லி அரைக்கும் ஆலைகளால் காற்று மாசு அதிகரித்து வருவதாக எழுந்த புகார் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) விரிவான பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குடியிருப்புகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் ஜல்லி அரைக்கும் கிரஷர் ஆலைகள் இயங்குவதால் தூசி மாசு அதிகரித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் ஜூலை 2-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருநீர்மலை பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version