Home செங்கல்பட்டு பாலாறு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

பாலாறு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

0

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பாலாறு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டன.

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், செங்கல்பட்டு வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டு, அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மீட்கப்பட்ட அரசு நிலம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version