Home செங்கல்பட்டு தாம்பரம் எம்எல்ஏ சரத்குமார் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

தாம்பரம் எம்எல்ஏ சரத்குமார் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

0

தமிழக மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதல்வர் விஜய் முன்னிலையில் தாம்பரம் எம்எல்ஏ சரத்குமார் உள்ளிட்ட 23 எம்எல்ஏக்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேக்கர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் த.வெக. கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைக்கப்பட்டது. கடந்த மே 10ஆம் தேதி முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

காலை 10 மணியளவில் சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் விஜய் ஆளுநரை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் 23 பேருக்கு அமைசர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மேலும் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார், கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ விக்னேஷ் உள்ளிட்ட பல புதிய முகங்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த சரத்குமார் அமைச்சராக பதவியேற்றது செங்கல்பட்டு மாவட்ட அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய அமைச்சர்கள் பட்டியல்:

  • ஸ்ரீநாத்
  • கமலி எஸ்.
  • சி. விஜயலட்சுமி
  • ஆர்.வி. ரஞ்சித்குமார்
  • வினோத்
  • ராஜீவ்
  • பி. ராஜ்குமார்
  • வி. காந்திராஜ்
  • பி. மதன் ராஜா
  • கே. ஜெகதீஸ்வரி
  • எஸ். ராஜேஷ்குமார்
  • எம். விஜய் பாலாஜி
  • டி. லோகேஷ் தமிழ்செல்வன்
  • ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்
  • ரமேஷ்
  • பி. விஸ்வநாதன்
  • ஆர். குமார்
  • கே. தென்னரசு
  • வி. சம்பத்குமார்
  • ஜெ. முகமது பர்வாஸ்
  • டி. சரத்குமார்
  • என். மரிய வில்சன்
  • கே. விக்னேஷ்

இந்த அமைச்சரவை விரிவாக்கம் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version