Home செங்கல்பட்டு “விஜய் ஆட்சிக்கு வந்தாச்சு, எக்ஸ்ட்ரா ₹10-ஐக் கொடு!” – மறைமலைநகர் டாஸ்மாக்கில் மதுப்பிரியர்கள் அதிரடி!

“விஜய் ஆட்சிக்கு வந்தாச்சு, எக்ஸ்ட்ரா ₹10-ஐக் கொடு!” – மறைமலைநகர் டாஸ்மாக்கில் மதுப்பிரியர்கள் அதிரடி!

0

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு டாஸ்மாக் கடையில், குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலித்த ஊழியரை, “தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார், ஒழுங்காகப் பணத்தைத் திருப்பித் தா” என மதுப்பிரியர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கும் ‘மாமூல் மாஃபியா’ இன்னும் ஓய்ந்தபாடில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் 4305 எண் கொண்ட அரசு டாஸ்மாக் கடையில் தான் இந்த அதிரடி லஞ்ச விவகாரம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்களிடம், அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி (MRP) விலையை விடக் குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களுக்குத் தலா 10 ரூபாய் கூடுதலாகத் தருமாறு அங்குள்ள ஊழியர்கள் தினந்தோறும் அடாவடியாகப் பணம் பறித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று மதுபானம் வாங்க வந்த விழிப்புணர்வுள்ள மதுப்பிரியர் ஒருவர், “அண்ணே.. பில் தொகையை விட ஏன் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கேக்குறீங்க?” என்று முறைப்படி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர், நுகர்வோர் என்றும் பாராமல் “ஏய்.. என்ன உரிமையில கேள்வி கேக்குற?” என ஒருமையில் பாய்ந்ததோடு, “கடை மெயின்டனன்ஸ் காசு மேலிடத்து நிர்வாகத்துக்குக் கொடுக்கணும், பாட்டில்களை வண்டியில இருந்து இறக்குறவங்களுக்கு லோடு காசு கொடுக்கணும்; அதான் வாங்குறோம்” எனப் பகிரங்கமாக லஞ்சக் காரணத்தைக் கூறி அதிர வைத்துள்ளார்.

ஊழியரின் இந்த அடாவடி பதிலால் கடையைச் சுற்றிக் கூடிய மதுப்பிரியர்கள், “இப்ப தமிழ்நாட்டுல நம்ம தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்துட்டாரு.. உங்களோட பழைய அராஜகம் எல்லாம் இங்க செல்லாது! சட்டவிரோதமாக வாங்கிய எக்ஸ்ட்ரா பத்து ரூபாயை ஒழுங்கா எங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துடு” என அதிரடியாகப் போர்க்கொடி தூக்கி முற்றுகையிட்டனர். அதற்கு அந்த ஊழியரோ, “புதிய அரசு வந்துவிட்டாலும், எக்ஸ்ட்ரா காசு வாங்கக் கூடாதுன்னு நிர்வாகத்துல இருந்து எங்களுக்கு இன்னும் எந்த ஆர்டரும் (Order) வரல” என அலட்சியமாகப் பதிலளித்து அதிர்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளார். கோட்டையில் ஆட்சி மாறினாலும் டாஸ்மாக்கில் தொடரும் இந்த பழைய மாமூல் அராஜகமும், தவெக அரசை வம்புக்கு இழுக்கும் ஊழியர்களின் இத்தகைய செயல்பாடுகளும் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version