மாமல்லபுரம்: சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய கம்பம் அமைப்பு

0
7

மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் சாலையில் சேதமடைந்திருந்த மின்கம்பம், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மின்வாரியத்தால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது.

வெண்புருஷம் பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்களில் சில சேதமடைந்திருந்தன. அவற்றை மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் படிப்படியாக சீரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சாய்பாபா கோயில் அருகே இருந்த மின்கம்பம் ஒன்று கடுமையாக சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் இருந்தது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நிறுவப்பட்டது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பே விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.