Home செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் கட்சியின் கொடி, பேஜ் மற்றும் தலைவர் புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வந்திருந்ததாக கூறப்படுகிறது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூர்த்தி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version