செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமார் 5,000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு, பி.இ., ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் வரை அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். மேலும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை தகுதிகள் கொண்டவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமின் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 044-27426020 என்ற தொலைபேசி எண்ணிலும், 9499055895, 8248185171, 9486870577 மற்றும் 8122140214 ஆகிய செல்பேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
