இனி கேஸ் சிலிண்டர் பெற e-KYC கட்டாயம்: மத்திய அரசு புதிய நடைமுறை

0
2

செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், கள்ளச் சந்தையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. அதன் படி, இனிமேல் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பதிவு செய்ய e-KYC மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Bharat Gas, Indian Oil Corporation (இண்டேன்), HP Gas போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் இணைப்பை தொடர விரும்பினால், அவசியம் e-KYC பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கு கேஸ் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு e-KYC செய்யாதவர்கள் கேஸ் புக்கிங் செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தவறான பயன்பாடுகள் குறைக்கப்படுவதுடன், உண்மையான பயனாளர்களுக்கு சேவைகள் நேர்மையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் விரைவில் தங்களது e-KYC செயல்முறையை முடித்து, எதிர்கால சிரமங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.