செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள ‘நடுபழனி’ மரகத தண்டாயுதபாணி கோயில், பக்தர்களிடையே தனித்துவமான ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில் என அழைக்கப்படும் இந்தத் தலத்திற்கு, காஞ்சி மகாபெரியவர் பெயரிட்டதாக நம்பப்படுகிறது.
பழனி முருகர் மற்றும் வடபழனி முருகன் கோயில் ஆகிய தலங்களைப் போலவே, இக்கோயிலும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இங்கு உள்ள முருகப்பெருமான் சிலை மலேசியாவில் உள்ள முருகர் சிலையை ஒத்த அமைப்பில் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதனால், ‘மலேசிய முருகன்’ எனவும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது.
இந்த கோயில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அமைதியான சூழலில் உள்ள இந்த ஆலயம், ஆன்மிக அமைதியை நாடி வரும் பக்தர்களுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.
அருகிலுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து இங்கு தரிசனம் செய்து வருகின்றனர்.





