செங்கல்பட்டு: பெண்களுக்கு POCSO சட்டம் குறித்து காவல்துறை விழிப்புணர்வு

0
2

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில் POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த சட்டம், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குற்றச்சம்பவமும் நடந்தால் அதை மறைக்காமல் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுமிகள் அல்லது பெண்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானால் பயம் அல்லது தயக்கம் இன்றி தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் உதவியும் வழங்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் சமூகத்தில் பாதுகாப்பு உணர்வு அதிகரித்து, குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.