ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’

0
2

தமிழகத்தில் ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், குறைந்த தொகையிலேயே தொடங்கி நீண்டகால சேமிப்பை உருவாக்க முடிவதாகும்.

உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1000 சேமித்தால் ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்யலாம். இதை 15 ஆண்டுகள் தொடர்ந்து செய்தால் மொத்தமாக ரூ.1,80,000 முதலீடு செய்யப்படும். இதற்கு கூடுதலாக ரூ.1,35,572 வரை வட்டி கிடைத்து, மொத்த தொகை ரூ.3,14,572 ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.