ஆதரவு அளிப்போருக்கு அமைச்சரவை வாய்ப்பு? தவெக முடிவு?

0
2

தமிழகத்தில் ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள அரசியல் பரபரப்புக்கு மத்தியில், விஜய் தலைமையிலான தவெக அரசில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை இடங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மொத்தமாக இரண்டு அமைச்சரவை பொறுப்புகளை வழங்க விஜய் முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு அமைச்சரவை பொறுப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விசிக தற்போது வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நிபந்தனையும் இன்றி தவெக ஆட்சி அமைப்பிற்கு ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதையே தங்களின் முக்கிய நோக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், கூட்டணி அரசியல் மற்றும் அமைச்சரவை அமைப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. விஜயின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.