தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவை தவெக பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இது மட்டுமின்றி விசிகவும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த ஆதரவு எண் 118 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆதரவு கடிதங்களுடன் விஜய், தமிழக கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக கூறப்படுகிறது. பெரும்பான்மை ஆதரவு உறுதி செய்யப்பட்ட நிலையில், விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை அமைப்பு, கூட்டணி கட்சிகளுக்கான பொறுப்புகள் மற்றும் பதவியேற்பு விழா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக அரசியலில் இந்த மாற்றம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.




