Home Trending/Viral Trending விஜய் தொகுதியில் ஓட்டுகேட்டு போன தவெக நிர்வாகிகள் – கட்டையால் தாக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

விஜய் தொகுதியில் ஓட்டுகேட்டு போன தவெக நிர்வாகிகள் – கட்டையால் தாக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

0

வீடு வீடாக பிரசாரம் சென்ற தவெக நிர்வாகிகளை, முதியவர் ஒருவர் கட்டையால் தாக்க முயன்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் சூழ்நிலையில், அந்த தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் நேற்று (ஏப்ரல் 15) வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த முதியவர், வாக்கு கேட்டு வந்தவர்களை வீட்டுக்குள் வர வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த முதியவர் அநாகரிகமாக பேசியதோடு, கையில் இருந்த விறகு கட்டையால் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் போட்டியிடும் தொகுதியிலேயே தவெக நிர்வாகிகளை தாக்க முயன்ற சம்பவம், சக நிர்வாகிகள் மற்றும் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy #TVK #Vijay #ElectionCampaign #TrendingTamil

NO COMMENTS

Exit mobile version