ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200-க்குள் இரண்டு அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ. 198 மற்றும் ரூ. 199 ஆகிய இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருந்தாலும், சலுகைகளில் பெரிய மாற்றங்கள் உள்ளன.
அதிக வேலிடிட்டி அழைப்பு வசதிகளுக்காகக் கூடுதல் நாட்கள் வேலிடிட்டி தேவைப்படுபவர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது. 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தம் 27 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் கால்களுடன், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அணுகல் உண்டு. அன்லிமிடெட் 5ஜி, அதிவேக இணையம் மற்றும் அதிக டேட்டாவை விரும்புபவர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தம் 28 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இதில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ்களின் அணுகல் இதிலும் உண்டு.
உங்களுக்குக் கூடுதல் நாட்கள் (18 நாட்கள்) அழைப்பு வசதி தேவைப்பட்டால் ரூ. 199 பிளான் சிறந்த தேர்வாகும்.
14 நாட்கள் வேலிடிட்டி போதும், ஆனால் அதிவேக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் கூடுதல் டேட்டா வேண்டும் என்பவர்கள் ரூ. 198 திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
