Home செங்கல்பட்டு திருப்போரூர் எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு

திருப்போரூர் எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு

0

செங்கல்பட்டு சாலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் திறந்து வைத்தார். திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா. விஜயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை நேரடியாக தெரிவிக்க வசதியாக இந்த அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

அலுவலக திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version