திருக்கழுக்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கவிநயா, மாநில அளவில் நடைபெற்ற பல குரல் பேச்சு நிகழ்ச்சியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
மாணவியின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பா. விஜயராஜ் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது மாணவி கவிநயாவின் பல குரல் பேச்சுத் திறமையை கேட்டறிந்த அவர், சால்வை அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தார்.
மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிப்பது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என எம்எல்ஏ விஜயராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவியின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
