Home செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில்: ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உயிரிழப்பு

சிங்கப்பெருமாள் கோவில்: ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உயிரிழப்பு

0

ராமேஸ்வரம் – பனாரஸ் அதிவிரைவு ரெயிலில் பயணம் செய்து வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விஞ்சியம்பாக்கம் ரெயில்வே கேட் அருகே நடைபெற்றுள்ளது. ரெயில் சென்று கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென ரெயிலில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version