Home செங்கல்பட்டு மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்

0

மதுராந்தகம் அருகே உள்ள கடப்பேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

பழமையான இந்த சிவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பக்தர்களின் பெரும் ஆன்மிக ஈர்ப்பை பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணியளவில் கோயில் வளாகத்தின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் வேத மந்திரங்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலின் தலைமை அர்ச்சகர் தலைமையில் வேதவிற்பன்னர்கள் வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தினர். பின்னர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி சிலைகள் கோயிலை வலம் வந்து திருவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன.

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தா.மேகவண்ணன் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version