Home Trending/Viral Trending அமெரிக்காவில் சாதனை படைக்கும் நடிகை ரோஜாவின் மகள்!

அமெரிக்காவில் சாதனை படைக்கும் நடிகை ரோஜாவின் மகள்!

0

அமெரிக்காவில் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் அடுத்தடுத்து சர்வதேச விருதுகளை வென்று, நடிகை ரோஜா – இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தம்பதியினரின் மகள் அன்ஷு ரோஜா சாதனை படைத்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா மற்றும் பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரின் மகள் அன்ஷு ரோஜா செல்வமணி, அமெரிக்காவில் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் அடுத்தடுத்து பல உயரிய விருதுகளைப் பெற்றுச் சாதனை படைத்து வருகிறார்.

அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் உள்ள புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகம் (Indiana University), அன்ஷு ரோஜாவின் கல்வி மேன்மையைப் பாராட்டி அவருக்கு மதிப்புமிக்க ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ (Herman B Wells) விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. அங்குள்ள ‘லுடி ஸ்கூல் ஆஃப் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்’ கல்லூரியில் கணினி அறிவியல் (Computer Science) பயின்று வரும் அவர், 2025-ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப மேன்மை மற்றும் சமத்துவத்திற்கான ‘மோரின் பிங்கர்ஸ் தலைமைத்துவ விருது’ மற்றும் 2024-25-ஆம் ஆண்டிற்கான ‘லுடி கல்வி சார் மேன்மை விருது’ ஆகியவற்றை வென்று அசத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி, ‘சென் வூ இன்னோவேஷன் சேலஞ்ச்’ போட்டியில் இறுதிப் போட்டியாளராகத் தேர்வான அன்ஷு, ‘கிரேஸ் ஹாப்பர் ஸ்காலர்ஷிப்’, ‘உலகளாவிய தொழில்முனைவோர் விருது-2024’ மற்றும் ‘உலகளாவிய தாக்கத்திற்கான வழக்கறிஞர் விருது 2025’ எனப் பன்னாட்டு அளவில் பல அங்கீகாரங்களைத் தன்வசமாக்கியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ரோஜா மற்றும் ஆர்.கே. செல்வமணி தம்பதியினர் நேரில் கலந்துகொண்டு தங்கள் மகளின் சாதனையைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டனர். திரைத்துறை மற்றும் அரசியலில் ஜொலிக்கும் ரோஜாவின் மகள், தற்போது சர்வதேசக் கல்வித் தளத்தில் இந்தியாவின் புகழை நிலைநாட்டி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version