Home Trending/Viral Trending நடிகர் ரவி மோகனுக்கு தேவி ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு

நடிகர் ரவி மோகனுக்கு தேவி ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், கலை மற்றும் சமூக துறைகளில் செய்த பங்களிப்பை பாராட்டி தேவி ரத்னா விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது விழா கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பழையகாவு ஸ்ரீபகவதி அம்மன் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்றது.

பாலக்காடு மாவட்டத்தின் பல்லாஸனா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, கலாசாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரவி மோகன் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் ஆதரவை கருத்தில் கொண்டு அவர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதில் ரூ.1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ரவி மோகன், கோயிலின் ஆன்மிகச் சூழல் மற்றும் தேவஸ்தானத்தின் பாரம்பரிய பெருமை குறித்து மகிழ்ச்சியுடன் பேசினார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

விழாவில் பாடகி கெனீஷா இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

NO COMMENTS

Exit mobile version