Home Local கார் மீது லாரி மோதிய விபத்து – சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு

கார் மீது லாரி மோதிய விபத்து – சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு

0

படாளம் அருகே முன் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிலர், நேற்று மேல்மருவத்தூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நள்ளிரவு காரில் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது படாளத்தில்  கேரட் லோடு ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து காரின் பின்பக்கம் மோதியுள்ளது.

இதில், காரில் பயணம் செய்த ஏழு வயது சிறுவன், மூதாட்டி பார்வதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பெண்கள் 3 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதலே இந்தப் பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version