Home செங்கல்பட்டு Politics News புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடக்கம்

புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடக்கம்

0

அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் உள்ள ரெட்டை மலை சீனிவாசன் மணி மண்டபத்தில் O. E. சங்கர், புதிய புரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

புதிய கட்சி தொடங்கிய கட்சியின் நிறுவனத் தலைவர் OE சங்கருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சூ. க. ஆதவன், மாவட்ட செயலாளர் தமிழினி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய புரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள O. E. சங்கர், புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பில் இருந்தவர்.

புரட்சி பாரதம் கட்சியை விட்டு விலகி வந்து தனது ஆதரவாளர்களுடன் புதிய புரட்சி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version