Home செங்கல்பட்டு முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்!

முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்!

0

செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன். மருத்துவரான இவர், அச்சரப்பாக்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1984ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 1989ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதன் பிறகு திமுகவில் இருந்து கட்சி மாறி அதிமுகவில் இணைந்த இ.ராமகிருஷ்ணன், 1991ல் அதே அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1991 முதல் 1995 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, அதிமுகவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று அவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 76. முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் மறைவு அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version