கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த பரமன்கேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த சக்குதுல் லோவ் (57) மற்றும் டிபாகர் முகர்ஜி ஆகியோர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று காலை அவர்கள் வழக்கம்போல் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சென்னை இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மாருதி சுஸூகி ஸ்விப்ட் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சக்குதுல் லோவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த டிபாகர் முகர்ஜி அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்தூர் போலீசார் உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
