செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் சிலர், பில் தொகையை விட கூடுதல் பணம் கேட்பதாக பொதுமக்களிடையே தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதைத் தடுக்க தற்போது கேஸ் நிறுவனங்கள் ஆன்லைன் கட்டண வசதிகளை வலுப்படுத்தியுள்ளன.
இதன்படி, பொதுமக்கள் தங்களது கேஸ் சிலிண்டர் கட்டணத்தை நேரடியாக GPay, PhonePe மற்றும் WhatsApp மூலமாக செலுத்தலாம். இதனால் டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் கூடுதல் பணம் வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.
பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய அதிகாரப்பூர்வ எண்கள்:
- Indian Oil Corporation (Indane): 75888 88824
- HPCL (HP Gas): 92222 01122
- Bharat Petroleum (Bharat Gas): 1800 22 4344
இந்த எண்களின் மூலம் ஆன்லைனில் பாதுகாப்பாக பணம் செலுத்தலாம். மேலும் பணம் செலுத்தியதற்கான ரசீதும் உடனடியாக கிடைக்கும்.
கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், பொதுமக்கள் தேவையற்ற கூடுதல் செலவை தவிர்க்கவும் இந்த வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




