தேசிய தலைநகர் டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை டெல்லி முதல்வர் Rekha Gupta வெளியிட்டுள்ளார்.
பிரதமர் Narendra Modi விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் நீடித்து வரும் போர் சூழ்நிலை, உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதன் மூலம் எரிபொருள் பயன்பாடு குறையும் என்றும், போக்குவரத்து நெரிசல் மற்றும் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் தேவையான இடங்களில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை அமல்படுத்த வேண்டும் என ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.





