“விஜி மாமாவின் அன்பான நன்றிகள்!”: வருங்காலத் தூண்களான ‘குட்டி நண்பர்களுக்கு’ மகுடம் சூட்டிய விஜய்!

0
4

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், தனது முதல் உரையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தன்னை ‘விஜி மாமா’ என்று அன்போடு அழைக்கும் சிறுவர், சிறுமியர்களுக்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கிப் பேசியது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு நிகழ்வாக, தனது வெற்றியில் சிறுவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை விஜய் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்:

குட்டி நண்பா, நண்பீஸ்க்கு என் பெரிய நன்றிகள். அவர்களால்தான் இன்று இது நடந்துள்ளது. தங்களின் பெற்றோர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்து, என் மீது மாறாத அன்பு காட்டிய அந்த மழலைகளுக்கு நான் எப்போதும் நன்றியாக இருப்பேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த விஜி மாமா அவர்களின் எதிர்காலத்திற்காகப் பல நல்ல விஷயங்களைச் செய்வேன். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, போதைப்பொருள் இல்லாத, சிறந்த கல்வி கிடைக்கக்கூடிய தமிழகத்தை உருவாக்கிக் கொடுப்பதே என் லட்சியம்” என்றார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போதே விஜய்க்குச் சிறுவர்கள் மத்தியில் இருந்த வரவேற்பு உலகறிந்த ஒன்று. அந்த அன்பை வெறும் வாக்குகளாகப் பார்க்காமல், ஒரு சமூகப் பொறுப்பாக ஏற்றுக்கொண்ட விஜய், தனது முதல் மேடையிலேயே “விஜி மாமா” என்கிற அடையாளத்துடன் பேசியது, குடும்பத் தலைவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது அரசு செயல்படும் என அவர் உறுதியளித்திருப்பது, தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கான புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.