Wednesday, April 29, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
HomeGadgetsவியட்நாம் எல்லையில் ரோபோ ராணுவம் - சீனா அதிரடி

வியட்நாம் எல்லையில் ரோபோ ராணுவம் – சீனா அதிரடி

வியட்நாம் எல்லைப் பகுதியில் முதற்கட்டமாக 500 ரோபோக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த்த சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

சீன ராணுவம் ஏற்கனவே ரோபோ நாய்களை பாதுகாப்புப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரோபோ வீரர்களை பயன்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் நெரிசலான இடங்களில் மக்களை வழிநடத்தவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே அண்மையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்ட நிறுவனமான UBTech Robotics, வியட்நாம் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சோதனை நிலையத்தில் அதன் Walker மனித உருவ மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கு 37 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித வடிவிலான 500 ரோபோக்களை சீன ராணுவத்தில் ஒப்படைக்க உள்ளது.

இவற்றை வியட்நாம் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக சீன எல்லைப் பகுதிகள் முழுவதும் இந்த ரோபோ வீரர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ரோபோக்கள் தாங்களாகவே பேட்டரிகளை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. இவை டிசம்பரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவை பயணிகளை வழிநடத்தவும், வரிசைகளை நிர்வகிக்கவும், தளவாடங்களை ஆதரிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் வியட்நாம் எல்லை தளத்தில் UBTechயின் Walker மனித உருவ ரோபோக்களை சோதிக்க உள்ளது. இந்த புதிய Walker மனித உருவ ரோபோக்கள், அவற்றின் சொந்த பேட்டரிகளை தன்னியக்கமாக மாற்ற முடியும். இதனால் ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட நேரம் செயல்படவும் முடியும்.

வால்கர் எஸ் 2 என்று பெயரில் 1.76 மீட்டர் உயரத்தில் ரோபோக்கள் இருக்கும் என்றும், இதன் ஒரு கரத்தில் 15 கிலோ வரையிலான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும் என்றும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் உலகத்திலேயே முதல் முறையாக இதில் இரண்டு பேட்டரிகள் இருக்கும் என்றும், ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மற்றொரு பேட்டரி மூலம் ரோபோக்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது. சார்ஜ் குறைந்த பேட்டரியை ரோபோக்கள் தானாகவே அகற்றி சார்ஜ் செய்து கொள்ளும். இதனால் 24 மணி நேரமும் வால்கர் எஸ் 2 ரோபோவால் செயல்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments