செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு

0
3

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB, DRB, SSC, RRB மற்றும் IBPS உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கும் நோக்கில், அனுபவம் வாய்ந்த புதிய பயிற்றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேர்வாகும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூன் 25, 2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் பயிற்றுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, பாடக்குறிப்புகள், PPT விளக்கக்காட்சிகள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்கள், மாதிரித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தயார் செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 044-27426020, 9486870577, 8122140214, 9344738148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன் தெரிவித்துள்ளார்.