செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அடிக்கடி வோல்டேஜ் குறைபாடு, மின்தடை, மின் அழுத்தம் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவது பொதுவான ஒன்றாகும். இதனால் வீட்டு உபகரணங்கள் பாதிக்கப்படுவதுடன், தினசரி வாழ்க்கையும் சிரமமாகிறது. இந்நிலையில், மக்கள் EB அலுவலகங்களுக்கு நேரில் சென்று புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், வீட்டிலிருந்தே எளிதாக புகார் அளிக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் இந்த புதிய முயற்சியின் மூலம், பொதுமக்கள் WhatsApp வழியாகவே தங்களது மின்சார குறைகளை பதிவு செய்ய முடியும். இதற்காக 94458 50811 மற்றும் 94431 11912 என்ற எண்ணுகளில் புகைப்படத்துடன் புகாரை அனுப்பலாம். குறிப்பாக, மின்கம்பிகள் சேதமடைதல், டிரான்ஸ்ஃபார்மர் கோளாறு, குறைந்த வோல்டேஜ் போன்ற பிரச்சனைகளை நேரடியாக பதிவு செய்வது மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உடனடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசர நிலைகளில், பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம், மின்வாரிய அதிகாரிகள் விரைவாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரச்சனையை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இந்த டிஜிட்டல் சேவை, மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய சிரமத்தையும் குறைக்கிறது. அதேசமயம், புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. செங்கல்பட்டு மக்களும் இந்த வசதியை பயன்படுத்தி, தங்கள் மின்சார பிரச்சனைகளை எளிதாக பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





