செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், எஸ். தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் புதிய முதல்வர் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மற்றும் அரசு சேவைகள் குறித்து கள ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், சுத்தம், உணவு தயாரிப்பு முறை உள்ளிட்டவற்றை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய அவர், உணவின் தரம் மற்றும் சேவைகள் குறித்து கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
மேலும், உணவகத்தில் வரும் பொதுமக்களுக்கு சீரான மற்றும் தரமான சேவை வழங்க அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் ஆய்வு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு மக்கள் நல திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





