Home Politics ஆர்.ஜி. கர் மருத்துவரின் தாயார் ரத்னா தேவநாத் எம்.எல்.ஏ.-வாக வெற்றி!

ஆர்.ஜி. கர் மருத்துவரின் தாயார் ரத்னா தேவநாத் எம்.எல்.ஏ.-வாக வெற்றி!

0

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 208 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவமகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் மாபெரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகத் தேர்வாகியுள்ளார். இத்தேர்தல் முடிவுகளின் மூலம் கடந்த 15 ஆண்டுகாலமாகத் தொடர்ந்த திரிணாமுல் காங்கிரஸின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட பானிஹட்டி தொகுதியில் ரத்னா தேவநாத் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இதோ, பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ரத்னா தேவநாத் 87,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தீர்த்தங்கர் கோஷை 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் நிர்மல் கோஷ் வசமிருந்த இந்தத் தொகுதி, தற்போது ரத்னா தேவநாத்தின் வெற்றியின் மூலம் பாஜக வசம் சென்றுள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் அபாயா, சஞ்சய் ராய் என்பவனால் கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கு உடனடியாக ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்ட போதிலும், இந்தச் சம்பவம் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஒரு தீராத கரும்புள்ளியாக மாறியது.

தனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி கேட்டுத் தொடர்ந்து போராடிய ரத்னா தேவநாத், பின்னர் பாஜக-வில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளது மாநில அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்துள்ள இதே வேளையில், மேற்கு வங்கத்திலும் பாஜக மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version