பாஜகவில் இணைந்த ராகவ் சதா! 24 மணிநேரத்தில் 10 லட்சம் ‘Followers’ அவுட்!

0
2

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முகமாகவும், இளைஞர்களின் அரசியல் அடையாளமாகவும் பார்க்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா, திடீரென பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகவ் சதாவின் இந்த அரசியல் நகர்வுக்குப் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக அவரது இளம் ரசிகர்கள் (Gen Z) மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 24) ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் உள்ளிட்ட 6 எம்.பி-க்களுடன் பாஜகவில் இணைவதாக ராகவ் சதா அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 24 மணிநேரத்திற்குள், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 10 லட்சம் ஃபாலோயர்கள் (Followers) குறைந்துள்ளனர். பாஜகவில் இணைவதற்கு முன்பு 1.46 கோடியாக இருந்த அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை, தற்போது 1.33 கோடியாகச் சரிந்துள்ளது. “உங்களை ஒரு வருங்கால பிரதமராகப் பார்த்தோம், ஆனால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #UnfollowRaghavChadha என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், ராகவ் சதா முன்பு ஒரு மேடையில் பேசும்போது, “பாஜக என்பது படிக்காத ரவுடிகளின் கட்சி” என்று விமர்சித்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “அப்படியென்றால் இப்போது நீங்களும் அந்த வரிசையில் இணைந்துவிட்டீர்களா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜக பஞ்சாபிகளை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிட்டது” எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாகப் பலம் கூடினாலும், டிஜிட்டல் உலகில் ராகவ் சதா சந்தித்துள்ள இந்தச் சரிவு, அவரது தனிப்பட்ட பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.