மிரளவைக்கும் அம்சங்களுடன் விவோ X300 சீரிஸ் – இந்தியாவில் எப்போது விற்பனை?!

0
8

போட்டோகிராபி ரசிகர்களை கவரும் வகையில், கேமரா கிரிப் கிட் மற்றும் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் வசதியுடன் விவோ X300 FE, X300 Ultra மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

விவோ நிறுவனம் தனது புதிய Vivo X300 FE மற்றும் Vivo X300 Ultra ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ZEISS Optics மற்றும் Telephoto Extender Gen 2 Ultra ஆதரவுடன், இந்த மாடல்கள் மொபைல் போட்டோகிராபியில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X300 FE மாடலில் 6.31 இன்ச் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், Snapdragon 8 Gen 5 சிப்செட், 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. 50MP ட்ரிபிள் கேமரா அமைப்புடன் இது வருகிறது.

Vivo X300 Ultra மாடலில் 6.82 இன்ச் LTPO OLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 200MP ட்ரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 6600mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங், IP68/IP69 ரேட்டிங் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது.

இந்த மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் நிலையில், மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

#Gadgets #Vivo #SmartphoneLaunch #TechNewsTamil #Trending