தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளுக்காக பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான “29” திரைப்படம், வரும் மே 8, 2026 அன்று தமிழகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார்.
White Carpet Films நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி இந்த படத்தை வெளியிடுகிறார். முன்னதாக “தேஜாவு”, “வித்தைக்காரன்” போன்ற படங்களை தயாரித்து கவனம் பெற்ற இந்த நிறுவனம், தற்போது “29” மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது.
2000களின் காதலை மையமாக கொண்டு உருவான இந்த படம், அந்த காலத்து உணர்வுகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கை தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. கதாநாயகனாக விது நடித்துள்ளார். “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய தோற்றத்தில் வருகிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல், உணர்ச்சி மற்றும் கமர்ஷியல் அம்சங்களை இணைத்து உருவான இந்த படம், ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
