ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த அம்சங்களால் கேமிங் மற்றும் கேமரா ரசிகர்களை கவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதனால், இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்த தகவலின்படி, 6.7 இன்ச் Quad-Curved OLED டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறும்.
மேலும் Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட், 12GB வரை ரேம், 512GB வரை ஸ்டோரேஜ் ஆதரவு கிடைக்கும். 50MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்பட உள்ளது. 6500mAh பேட்டரியுடன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP68/IP69 ரேட்டிங், Dolby Atmos, Android 16 போன்ற அம்சங்களுடன் ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
