சூப்பர் கேமரா, சக்திவாய்ந்த சிப்செட், மிகப்பெரிய பேட்டரி ஆகிய அம்சங்களுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையை அதிர்க்க தயாராகிறது விவோ.
விவோ நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த vivo X300 Ultra ஸ்மார்ட்போன், வரும் மே 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 6.82 இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மூலம் உயர் வேகம் மற்றும் கேமிங் அனுபவம் கிடைக்கும்.
200MP Sony LYTIA மெயின் கேமரா, 200MP டெலிபோட்டோ, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய ட்ரிபிள் கேமரா அமைப்புடன் புகைப்பட ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 50MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங், Android 16, 16GB ரேம், 1TB ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளியாகும். IP68/IP69 ரேட்டிங், Wi-Fi 7 உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகளும் இதில் உள்ளது.
