Home செங்கல்பட்டு கோடையில் தாகம் தீர்க்க இலவச நீர் மோர் பந்தல் திறப்பு – எஸ்.ஆர்.எம் மாணவர்களின் சேவை

கோடையில் தாகம் தீர்க்க இலவச நீர் மோர் பந்தல் திறப்பு – எஸ்.ஆர்.எம் மாணவர்களின் சேவை

0

கடும் வெயிலில் வாடும் மக்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில், மாணவர்கள் தொடங்கிய இந்த சேவை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தமிழ் பேராயம் சார்பில், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் முன்னெடுத்து இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தின் 4-ஆம் நுழைவாயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பதிவாளர் முனைவர் பொன்னுச்சாமி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிர்வாகிகள், இணை இயக்குநர்கள் மற்றும் தமிழ் பேராயம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வெப்பத்தை சமாளிக்க நீர் மோர் மட்டுமின்றி தர்பூசணி உள்ளிட்ட பழங்களும் வழங்கப்பட்டன. வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோடைக்காலம் முழுவதும் இந்த அறப்பணி தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் சமூக பொறுப்புணர்வு பாராட்டைப் பெற்று வருகிறது.

Chengalpattu #SRMUniversity #SummerService #NeerMor #SocialService

NO COMMENTS

Exit mobile version