Home லைஃப்ஸ்டைல் ஆன்மிகம் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் – விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் – விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!

0

கோவிந்தா’ முழக்கங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையில் இறங்கிய வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று (மே 1) கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர், அதிகாலை பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வந்த கள்ளழகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக கண்டாங்கி பட்டு உடையணிந்து தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகரை, ‘கோவிந்தா’ முழக்கங்களுடன் பக்தர்கள் வரவேற்றனர். வைகையில் எழுந்தருளியபோது ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி வழிபாடு செய்தனர். பின்னர் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.

இன்று பிற்பகல் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ள நிலையில், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருள உள்ளார்.

Madurai #ChithiraiFestival #Kallazhagar #VaigaiRiver #TamilNadu

NO COMMENTS

Exit mobile version