Home செங்கல்பட்டு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை – மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பூத் ஏஜென்ட்களுக்கு அறிவுரை

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை – மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பூத் ஏஜென்ட்களுக்கு அறிவுரை

0

வாக்கு எண்ணும் மையங்களில் ஒழுங்கும் பாதுகாப்பும் உறுதி செய்ய, அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கியது.

தமிழகத்தில் ஏப்ரல் 23 நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு, EVM இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி மூன்று மையங்களில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகள் ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள் வில்வராயநல்லூர் பகுதியில் உள்ள கல்லூரியில், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகள் குரோம்பேட்டை MIT கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலதி ஹெலன் தலைமையில் பூத் ஏஜென்ட்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, தவெக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

வாக்கு எண்ணும் நாளில் காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

#Chengalpattu #Election2026 #VoteCounting #BoothAgents #TamilNaduNews

NO COMMENTS

Exit mobile version