விஜய்யுடன் ஷீரடி சென்ற அந்த 2 பெண்கள் யார்? வைரல் வீடியோவின் பின்னணி இதோ!

0
1

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், இன்று மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சென்னையில் இருந்து தனி விமானம் (Private Jet) மூலம் விஜய் ஷீரடி சென்றார். அப்போது அவருடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், உதவியாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோருடன் இரண்டு பெண்களும் விமானத்தில் சென்றனர். பின்னர் கோயிலில் விஜய் பிரார்த்தனை செய்த போதும், அந்தப் பெண்கள் அவருக்கு அருகிலேயே நின்றனர். விஜய்யின் இந்தத் திடீர் ஆன்மீகப் பயணத்தை விட, அவருடன் சென்ற அந்த இரண்டு பெண்கள் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பலரையும் விவாதத்தில் ஈடுபடுத்தியது.

பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தக் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. விஜய்யுடன் சென்ற அந்த இரண்டு பெண்கள் நேத்ரா ரெட்டி மற்றும் நேஹா ரெட்டி. இவர்கள் இருவரும் தாய் மற்றும் மகள் ஆவர். இவர்கள் இருவரும் விஜய்யின் மிக நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியின் மனைவி மற்றும் மகள் ஆவர்.

தவெக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, விஷ்ணு ரெட்டி விஜய்க்கு நீண்டகாலமாகப் பழக்கமானவர் என்றும், விஜய்யின் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான பல முக்கிய முடிவுகளில் அவருக்குப் பக்கபலமாக இருப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

விஜய் தனது குடும்ப நண்பரான விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் விஜய்யின் பாதுகாவலர் நயீம் மற்றும் கார் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரும் ஷீரடி சென்றிருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகும் இந்த இக்கட்டான தருணத்தில், விஜய் தனது நெருங்கிய நட்பு வட்டாரத்துடன் ஆன்மீக ரீதியாகத் தன்னை தயார்படுத்திக் கொள்வது அவரது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.