MLA பதவியை ராஜினாமா செய்த விஜய்..

0
1

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். ஒரே நபர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் எம்எல்ஏவாக தொடர முடியாது என்ற தேர்தல் விதிமுறையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அவர் எந்த தொகுதியை தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அவர் சென்னை பெரம்பூர் தொகுதியை தக்கவைத்து, திருச்சி கிழக்கு தொகுதியை காலி செய்துள்ளார்.

விஜயின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும். அதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் முக்கிய கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜயின் கட்சி மீண்டும் அந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.