செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நில வரி வசூல், பயிர் ஆய்வு, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு, நிலம் தொடர்பான புகார்கள் பெறுதல், பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் VAO அலுவலர்களின் பொறுப்பாகும். மேலும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு கடன் வசதிகளை பெற உதவுவதும் இவர்களின் கடமைகளில் ஒன்று.
இந்த சேவைகளை வழங்கும் போது எவரேனும் அலட்சியம் காட்டினாலோ அல்லது லஞ்சம் கோரினாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக 044-22311049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் நேர்மையுடன் வழங்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். பொதுமக்கள் தங்களின் உரிமைகளை அறிந்து, தவறுகளை எதிர்த்து செயல்படுவது முக்கியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலை தடுக்கும் முயற்சியில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.





