Home செங்கல்பட்டு வண்டலூர்: பைக் மோதி போக்குவரத்து கழக ஊழியர் உயிரிழப்பு

வண்டலூர்: பைக் மோதி போக்குவரத்து கழக ஊழியர் உயிரிழப்பு

0

வண்டலூர் பகுதியில் சாலை விபத்தில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் (65), தாம்பரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவர், வண்டலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடந்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் திடீரென செந்தில்வேல் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், போக்குவரத்து கழக பணியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version