Home செங்கல்பட்டு செங்கல்பட்டு: யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு..

செங்கல்பட்டு: யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு..

0

Union Bank of India சார்பில் Apprentices பணியிடங்களுக்காக நாடு முழுவதும் 1865 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி துறையில் வேலை பார்க்க விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறையில் ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் உள்ளூர் மொழித் திறன் பரிசோதனை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 19 என குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. www.unionbankofindia.bank.in

NO COMMENTS

Exit mobile version